
முதுமையை நீக்கி இளமையை பெறச் செய்யும் அமிர்த சஞ்சீவி..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
முதுமையை நீக்கி இளமையை பெற செய்யும் அமித சஞ்சீவி என்னவென்றால் அதுதான் இஞ்சி, சுக்கு, கடுக்காய். இதில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்
. அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
காலையில் இஞ்சி மற்றும் கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோழை ஊன்றி குறுகி நடப்பவனும் கோழை வீசி குலாவி நடப்பானே… இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத பித்த கபம் மூன்றினையும் சமன் செய்பவை.
காலையில் இஞ்சி சாறு மூன்று டீஸ்பூன் எடுத்து சுத்தமான தேன் 3 டீஸ்பூன் அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பித்தத்தை இது சமன் செய்யும். மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் அரை டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டால் வாயுவை சமன் செய்யும். இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் கபம் எனப்படும் ஸ்லேத்துமத்தை இது சமன் செய்யும். கண்டிப்பாக இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு செயல்படுங்கள்.