“முத்திய பழங்கள் சாராயத்திற்கு ஏங்க, முத்தான பழங்கள் விற்கும் முந்திரி” – நெகிழவைக்கும் நிகழ்வு.!!

தமிழகமே தலைநிமிர்வாய் என்று நாம் மாரைதட்டி கூவினாலும் திரை மறைவில் இன்றைய இளம் தலைமுறையினர்கள் எதிர்காலம் என்பது போதைப்பொருள், சினிமா மோகம், ரீல்ஸ் வீடியோ என முடங்கி தான் உள்ளது.

தொழில்நுட்பத்தின் தாக்கம் பல உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் ஏற்படுத்தி உள்ளது. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப் போல ஏழ்மை நிலை மற்றும் வறுமையின் தாக்கம் என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லாமல்  பல இன்னல்களுடன் இன்றும் தொடர்கிறது. கோடை காலத்தில் சிறுவயதில் ஓடி விளையாடும் சிறார்கள் தங்களின் குடும்ப எதிர்காலத்திற்காக அவர்களின் பெற்றோரை போல கடும் உழைப்புக்கு தள்ளப்படுகின்றனர்.

அது அவர்களின் வாழ்க்கையை கஷ்டத்திலும், முன்னேற்ற உதவும் எனினும் சரியான பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய முந்தைய தலைமுறை டாஸ்மாக் வாசலில் 12 மணிக்கு முன்பே கட்டிங் ,குவாட்டர் என்று காத்து உள்ளது. இதனை ஒருவர் உவமைப்படுத்தி தற்போது பதிவிட்டுள்ள முகநூல் பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி உள்ளது,

அந்த பதிவில் “முத்திய பழங்கள் எல்லாம் மது கடையில் வரிசையில் நிற்க, வேகாதா  வெயிலில் முத்தான பழங்கள் முந்திரி பழம் விக்கிறது”,  என குறிப்பிட்டுள்ளார். முந்திரி பழம் கடலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் பிரதானமாக உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, முந்திரி மரங்களில் இருந்து கிடைக்கும் முந்திரி பழத்திற்கு மவுஸ் அதிகம்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=1372367563427171&id=100019618206625&ref=embed_post

Read Previous

ரம்மியமாய் காட்சிதந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளம்..!! மழையின் போது காணக்கிடைக்காத காட்சி உள்ளே.!!

Read Next

போனில் ஆடர் செய்தால் வீட்டிற்கே வரும் போதைப்பொருள்..!! சென்னையில் 4 பேர் கும்பல் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular