முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு..!! சவுக்கு சங்கர் மீது எட்டாவது வழக்கு பதிவு..!!

ரெட் பிலிப்ஸ் யூடியூ சேனலில் முத்துராமலிங்க தேவர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது இரு பிரிவினருடைய கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையத்தில் ஏழு வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்போது கோவை மாநகர் காவல்துறையினர் எட்டாவது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு தொடர்பாக கோவை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் தற்பொழுது திருச்சி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே ரெட் பிலிப்ஸ் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சவுக்கு சங்கருக்கு தரமான சம்பவம் செய்த பெண் காவலர்கள்..!!

Read Next

இசிஆர் ரோட்டில் குறுக்கே வந்த பசு மாடு..!! நொடி பொழுதில் நடந்த கொடூர விபத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular