முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியை கொலை செய்து நகை-பணம் திருட்டு? நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ காஜிப்பூர் இந்திரா நகர் பகுதியை சார்ந்த தேவேந்திர நாத் துபே. இவர் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி ஆவார். துபாயின் மனைவி மோகினி (வயது 71).

இன்று காலை துபாய் கோல்ட் காப் விளையாட  சென்று உள்ளார். பின்  அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய சமயத்தில் மனைவி சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். மேலும் வீட்டின் அலமாரி திறந்து பொருட்களும் சிதறி கிடந்தது. இதனை தொடர்ந்து தனது மனைவி கொலை செய்யப்பட்டு பின்னர் வீட்டில் கொள்ளை நடந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காஜிப்பூர்  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

கேமிங் மையத்தில் பயங்கர தீ விபத்து..!! 20 பேர் உடல் கருகி பரிதாப பலி.!!

Read Next

பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு..!! தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular