
கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் 24 வயதான தமிழரசு , இவர் மீது கஞ்சா மற்றம் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது,
இந்தநிலையில் ஒரு வழக்கில் கைதான தமிழரசு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான ஸ்ரீகாந்த் என்வருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது,
இந்தநிலையில் நேற்று தமிழரசு தனது தம்பியுடன் ஸ்ரீகாந்தை கொலை செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள காலி இடத்துக்கு சென்றுள்ளார், அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தமிழரசின் வயிறு மற்றும் இடுப்பில் குத்தினார்,
இதனை தடுக்க சென்ற அவரது தம்பிக்கும் கையில் கத்திக்குத்து ஏற்பட்டது, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஸ்ரீகாந்த் அங்கு இருந்து தப்பிச் சென்றார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழரசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழரசை கத்தியால் குத்திய ஸ்ரீ காந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.