
மும்பை இந்தியன்ஸ் அணியின் எலிமினேட்டர் சுற்று வெற்றியை தனது திருமண நாளுக்கு கிடைத்த பரிசாக பார்ப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை மைதானத்தில் லக்னோவ் சூப்பர் ஜயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் எலிமினேட்டர் சுற்றில் மோதின. இந்த போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 25வது திருமண நாளை நேற்று கொண்டாடினார். மும்பை அணியின் வெற்றியை தொடர்ந்து வீரர்களுடன் கலந்துரையாடிய சச்சின், மும்பை வெற்றி தனக்கு கிடைத்த சிறந்த பரிசு என்று கூறினார்.