
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, பல்கர், ராய்கட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் இந்திய வானிலை மையம் நாளை ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக, மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், உத்தரகண்ட், கோவா, ராஜஸ்தான், அசாம், மேகாலயா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிக மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.