
இன்று (பிப். 11) தைப்பூச திருவிழா முருகன் மற்றும் சிவன் கோயில்களில் விமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலையில் எழுந்து குளித்து, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவுக்கு பதில் 3 வேளையும் பால், பழம் சாப்பிடலாம். கோயிலுக்குச் சென்று பூஜையில் பங்கேற்று சிவனையும், முருகனையும் தரிசிக்க நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.