
- முருங்கைக்காய் தக்காளி குழம்பு
தேவையானவை :
முருங்கைக்காய் – 5
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் – 3 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
கருவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – சிறிது
புளி – 3 டீஸ்பூன் தண்ணீர்
அரைக்க தேவையானவை :
தக்காளி – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மேற்கண்ட பொருட்களை நான்கு அரைத்து கொள்ளவும்.
செய்முறை :
1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் 2 கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக விடவும். பின் புளி தண்ணீர் சேர்த்து நன்கு வற்றும் வரை வதக்கவும்.
2.இதனுடன் தேங்காய் துறுவல் சேர்க்கவும். பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் கருவேப்பிலை,நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.