முருங்கைக் கீரை மற்றும் முருங்கைக்காய் முருங்கை பூவை விரும்பாதவர்கள் யாரும் இல்லை முருங்கை மரத்தை வைத்தவன் வெறுங்கையோடு சென்றதாக இல்லை என்ற பழமொழியும் உண்டு…
முருங்கையின் வேறு பெயர் சிக்குறு, கிரிஞ்சனம், கிளவி, சோபாஞ்சனம், பிரம்மவிருஷம் ஆகும், முருங்கையின் குணம் உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும், கண் எரிச்சல் நீக்கும், தாதுக்கள் பலப்படுத்தும், ஆண்மை பெருகும், கை காலசதி போக்கும், எலும்புகளை உறுதியாக்கும், மலக்கட்டை ஒழிக்கும், முருங்கை மரம் இலை முதல் அடி வேர் வரை சிறந்த உணவு பொருளாகும் மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது முருங்கைக் கீரையில் உயிர் சத்துக்களும் பொருட்களும் சுண்ணாம்பு இரும்பு சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது இக்கீரை பொரியல் செய்தும் தாளிதம் செய்தும் உணவுடன் சேர்த்து உண்ணலாம் துவரம் பருப்புடன் சேர்த்து துவையல் ஆக்கி செய்து உண்பதன் மூலம் மிகையான சுவை அளிக்கும், முருங்கை பிஞ்சு சிறந்த கறி உணவாகும் பூவில் இருந்து பிஞ்சு தோன்றியவுடன் எடுத்து பாகம் செய்து உண்ணும் உணவு சிறந்த உணவாக இருக்கும், முருங்கைக்காய் பழ வகைகளில் பயன்படுத்தப்படுகிறது முருங்கைக் குள் இருக்கும் முற்றாத விதையுடன் கூடிய ஊட்டச்சத்து கொண்டது, முருங்கை காயில் அமைந்திருக்கும் விதையும் அதன் உள்ளுக்கும் பருப்பும் மிக்க சுவையுடையது கொழுப்பு சத்து நிறைந்தன உடல் வலுவுக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தன முருங்கையில் பூ பிஞ்சு காய் அனைத்துமே சிறந்த பத்திய கறியாகும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்கு சுரக்கும், முருங்கைக்கீரை சாற்றுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டை குழியில் தடவ இரும்பல் குரல் கம்மல் முதலியவை நீங்கும், முருங்கை பிசினை நல்லெண்ணையில் கரைத்து காதில் விட காது வலி நீங்கும் முருங்கை வேரின் சாற்றுடன் பால் சேர்த்து தக்களவாக உண்டு வர விக்கல் ஆஸ்துமா கீழ்வாதம் உள்ளுறுப்புகளின் வீக்கம் முதுகு வலி முதலியன நீங்கும், முருங்கப்பட்டையில் இருந்து எடுக்கப்படும் சாறு பல தைலங்களின் சேர்க்கப்படுகிறது முருங்கை பட்டையை தூளாக்கி வீக்கங்கள் கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டுவதும் உண்டு..!!




