
முளைகட்டிய பயிரை எப்படி சாப்பிடணும் தெரியுமா..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
முளைகட்டிய பயிறு உடலுக்கு ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும். முளைகட்டிய பயிரில் எக்கசக்கமான ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்திலோ இந்த முளைகட்டிய பயிரை பலரும் மறந்து விட்டனர் என்பதை நிதர்சனமான உண்மை. முளைகட்டிய பயிறு உடல் எடை குறைய நினைப்பவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளலாம். முளைகட்டிய பயிறு உடல் எடை குறைய நினைப்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்நிலையில், முளைக்கட்டிய பயிரை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
முளைகட்டிய பயிரை ஒருபோதும் வேகவைத்து சாப்பிடக்கூடாது. சாப்பிடக்கூடாது. முளைகட்டிய பச்சைப் பயிரை நீர் சேர்த்து அரைத்து வெள்ளம் மற்றும் தேன் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் உலர் திராட்சை சேர்த்து காலை டிபன் ஆக சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முளைகட்டிய பயிரை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு கப் இந்த முளைகட்டிய பயிரை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மற்றும் பெண்களின் கர்ப்பப்பை நோய்கள் வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரை குணப்படுத்த முளைகட்டிய பயிறு மிகச்சிறந்த மருந்தாகும்.