நமது முன்னோர்கள் முளைக்கட்டிய பயிர்களை காலை நேரங்களில் சாப்பிடுவது வழக்கம், ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே அந்த பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியமாகவும் நமது உடலுக்கு தேவையான சத்துகளும் கிடைக்கிறது அதேபோல் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் கரைந்து விடுகிறது…
முளைவிட்ட கொண்டைக்கடலையை சாப்பிடுவதனால் விளையாட்டு வீரர்கள் சோர்வு அடையாமல் இருப்பார்கள், கடின வேலை செய்பவர்கள் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக இருப்பார்கள், அதேபோல் முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும், முளைவிட்ட எள்ளு சாப்பிடுவதனால் உடல் ஒல்லியாக இருப்பவர்கள் பருமனாக கூடும், முளைவிட்ட பச்சை பயிறு சாப்பிடுவது வருவதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும், முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறைந்து மூட்டு வலி நீங்கும், முளைவிட்ட கருப்பு உளுந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க செய்யும், மேலும் முளைவிட்ட கருப்பு உளுந்த பருப்பை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் சாப்பிடுவது சிறந்தது..!!




