முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

இன்றைய காலகட்டத்தில் பலரும் முள்ளங்கி வகை கிழங்குகளை ஒதுக்குவது வழக்கம், மேலும் முள்ளங்கி சமையலில் பயன்படுத்தும் போது ஒரு விதமான வாசனை ஏற்படுவது உண்டு அந்த வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை, அதனால் பலரும் முள்ளங்கியை சாப்பிடாமல் ஒதுக்குவது வழக்கம் ஆனால் முள்ளங்கி சாப்பிடுவதனால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம்..

தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதில் முதன்மை பெற்றது முள்ளங்கி, குரலை இனிமையாகிறது பசியை தூண்டக்கூடிய சக்தி கொண்டது முள்ளங்கி, அதேபோல் சிறுநீர் அடைப்பை போக்கும் சக்தியாக விளங்குகிறது மேலும் வெட்டை நோய் முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த மிக சிறந்த மருந்தாக முள்ளங்கி பயன்படுகிறது, மேலும் முள்ளங்கி சூப்பு குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர், இதனை தொடர்ந்து இதன் இலையை சாப்பிட்டு வந்தால் பசி தூண்டி சிறுநீர் பெருகி தாதுப்பலம் கொடுக்கும் என சித்தர்கள் பலரும் சொல்லுகின்றனர், வாத நோய் வயிற்றெரிச்சல் தலைவலி ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக முள்ளங்கி விளங்குகிறது…!!

Read Previous

உடல் சூடு தணிய இதனை செய்யுங்கள்..!!

Read Next

உங்கள் முகம் அழகு பெற வேண்டுமா இதை செய்யுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular