வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, KKR அணியில் இருந்த முஸ்தாபிசுர் ரஹ்மானை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒருவேளை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அல்லது சௌமியா சர்க்காராகவோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?. இதில் நாம் யாரைத் தண்டிக்கிறோம், ஒரு நாட்டையா, ஒரு தனிநபரையா அல்லது அவரது மதத்தையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.




