மூதாட்டி மரணம்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

தர்பங்காவிலிருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பீகாரைச் சேர்ந்த கலாவதி தேவி (85) என்பவர் தனது பேரனுடன் தர்பங்காவிலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தார். விமானம் பறந்து கொண்டிருந்தபோது அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. விமானம் தரையிறங்கியதும், கலாவதி தேவி ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read Previous

பிக்பாஸில் எல்லை மீறும் நிக்சன், பூர்ணிமா..!!

Read Next

இந்தியாவில் அதிகரிக்கும் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular