மூத்த அதிமுக முக்கியப் புள்ளி, முன்னாள் எம்எல்ஏ காலமானார்..!! அரசியல் கட்சியினர் அஞ்சலி.!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொகுதியில் இருந்து கடந்த 1989 ஆம் ஆண்டு மற்றும் 1991 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பிரின்ஸ் எம் தங்கவேல்.

இவர் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்த எம் தங்கவேல் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டெடுத்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாய் உயிர் இழந்து உள்ளார். மறைந்த முன்னாள் எம்எல்ஏ தங்கவேலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி.. பரபரப்பு சம்பவம்..!

Read Next

மாமியாருடன் தனிமையில் உல்லாசம்..!! கையும் களவுமாக சிக்கிய கணவரை நொறுக்கியெடுத்த மனைவி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular