தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ராயன்.
தனுஷ் நடித்து இயக்கி இருந்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் இத்திரைப்படம் முதல் நாளில் 12 கோடி வசூல் செய்ய இரண்டு நாளில் 25 கோடியை தாண்டி வசூல் செய்தது. இந்த நிலையில் தற்போது மூன்று நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ 46 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி தெரிவித்த கையோடு திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.