மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுகவினர் உண்ணாவிரதம்..!!

மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த சட்டங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுகவினர் இன்று உண்ணா விரதம்  நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் அமைச்சர் துறைமுருகன் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர், இது குறித்து திமுக சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ எம்,பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது

“இந்திய திருநாட்டினை காவல்துறை ஆட்சி நாடாக மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிராக ஜனநாயகத்திற்கு விரோதமான மத்திய பாரதிய ஜனதா அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ளது .எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ள இந்த போராட்டத்திற்கு கட்சியின் சட்டத்துறை செயலாளர் இளங்கோ எம்பி, தலைமை தங்குகிறார். அமைச்சர்கள் சேகர் பாபு, மா சுப்பிரமணியன், திமுக சட்டத்துறை தலைவர் பரந்தாமன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

சட்டத்துறை இணை செயலாளர் கே எஸ் ரவிச்சந்திரன் வரவேற்புரை பேச உள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கின்றார், இந்த உண்ணாவிரதத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் எம் பி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே கோபாலகிருஷ்ணன், திமுக கட்டமைப்பு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கொள்கை பரப்பு செயலாளர், திருச்சி சிவா எம் பி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே எம் காதர் மொய்தீன், மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்ராம், பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹர்லால் எம்எல்ஏ, தலைமை கழக சட்ட தலைமை ஆலோசகர் எம்பி ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர் .

திமுக துணை பொதுச் செயலாளர் சட்ட துறை செயலாளர் ஜெ பச்சையப்பன், கே. சந்துரு ஆகியோர் நன்றியுரை ஆற்றுகின்றனர். மாவட்ட நீதிமன்ற திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கட்சியின் வழக்கறிஞர் மற்றும் கட்சி முன்னணியினர், தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல்  சட்டங்களை எதிர்த்து தாங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”, என்று அதில் தெரிவித்துள்ளார்.

Read Previous

எந்த தலைவலியையும் எளிய முறையில் போக்கும் வீட்டு வைத்தியம்..!!

Read Next

வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய் குணமாகும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular