இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரிடமும் எவ்வாறு தொலைபேசி இருக்கிறதோ அதேபோல் பலரிடம் இந்த தொப்பை என்பது கண்டிப்பாக இருக்கிறது. இதற்கு நாம் உண்ணும் உணவே முக்கியமான காரணம். வேலை வேலை என்று ஓடிக்கொண்டு ரெடிமேட் உணவுகளையும் கடைத்தெருகளில் கிடைக்கும் உணவுகளையும் நாம் ருசித்து சாப்பிடுவதால் தான் இந்த தொப்பை என்பது நம்மை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. பலரும் இந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். பல கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு இந்த தொப்பையை குறைக்க வேண்டும் என்று உடற்பயிற்சியில் இறங்குகிறார்கள். உடற்பயிற்சி மட்டும் தொப்பையை குறைக்குமா என்பது கேள்வி குறித்தான். ஏனென்றால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைக்க சத்தான உணவுகளையும், பழங்களையும், பானங்களையும் அருந்துவது மிகவும் முக்கியமான ஒன்று. மூன்று நாட்களில் தொப்பை குறைவது நம் கண்கூட பார்க்கும் வகையில் ஒரு ஜூஸ் ஒன்று உள்ளது. அதை தினமும் குடித்து வர தொப்பை முற்றிலுமாக குறையும்.
மூன்றே நாளில் தொப்பையை படிப்படியாக குறைக்க உதவும் இந்த ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. வெள்ளரிக்காய்
2. ஐந்து எலுமிச்சை பழம்
3. ஒரு எலுமிச்சங்காய்
4. புதினா இலைகள் 15
5. துருவிய இஞ்சி ரெண்டு ஸ்பூன்
6. தண்ணீர் 2.5 லிட்டர்
செய்முறை:
எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சம் பழத்தை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள மூணு எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு 1.5 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும் பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி அத்துடன் வெள்ளரிக்காய் எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்றாக கிளறி 24 மணி நேரம் ஊறவைத்து பின் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் மூன்று நாட்களில் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நாம் கண்கூட பார்க்கலாம். ஆனால் முற்றிலுமாக தொப்பை குறைய வேண்டுமானால் நாம் இதை தொடர்ந்து பாலோ செய்ய வேண்டும்.