மூலிகை : எலும்பை வலுவாக்கும் பிரண்டை..!!

பிரண்டை சாப்பிடுவதன் மூலம் பசி தூண்டும் என்று முன்னோர்கள் கூறுவது உண்டு, ஆனால் அதே பிரண்டையை நாம் சாப்பிட்டு வரும் பொழுது நமது எலும்பு ஆரோக்கியம் அடையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறித்து ரத்தத்தை சுத்திகரிக்க செய்வதற்கு பிரண்டை மிகச்சிறந்த காரணியாக பயன்படுகிறது..

ரத்தத்தில் சுண்ணாம்புசக்தி கால்சியம் அளவை முறைப்படுத்தும் ஆற்றல் பிரண்டைக்கு உள்ளதென தேரையர் காப்பியம் கூறுகிறது, சைட்டோஸ்டீரால், இரிடாய்ட்ஸ், குவர்சிடின், கரோட்டின் போன்ற வேதிப்பொருட்கள் அதிகம் பிரண்டையில் நிறைந்துள்ளது, இவற்றை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது பசித்தன்மை தூண்டுவதாக பலரும் கூறுகின்றனர், மேலும் பிரண்டையுடன் சிறிது உப்பு ஜாதிக்காய் தூள் 5 கிராம் சேர்த்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி இடுப்பு வலி தீரும் மேலும் எலும்பு வலுவாகும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர், இதனை வாரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் எலும்பு வளர்ச்சி சிறப்பாக அமையும் என்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!

Read Previous

தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள்..!!

Read Next

ஆசனம் : தனுராசனத்தின் பலன்கள் அறிவோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular