
இன்றைய காலத்தில் சாப்பிடும் உணவு முறை மற்றும் நமது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக சிறுநீரக தொற்று மற்றும் பெண்களுக்கு இயற்கையாகவே உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துவதற்கு சிறந்த மூலிகையாக இருப்பது பாதாளமூலி என்னும் நன்னாரியாகும்…
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் வன்மை பாதால மூலியினும் நன்னாரிக்கு இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது லூபியோல், சிட்டோஸ்டெரால், ஆல்பா அமரின்,ஹெக்ஸாட்ரியாகோண்டேன் போன்ற வேதிப்பொருட்கள் இருந்த சத்துக்கள் இதில் உள்ளது இதன் வேரை இடித்து நன்னீரில் ஊறவிட்டு எலுமிச்சை சாறு கருப்பட்டி சேர்த்து பருகினால் சிறுநீரக பாதை தொற்று பாதிப்புகள் தீரும் என்று சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர், மேலும் பருவம் அடைந்த பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் வயிற்று வலி போன்றவை இந்த மூலிகை கசாயம் மூலம் சரி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்..!!