மூளைச்சாவு ஏற்பட்ட 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது, இருந்தும் வாழ்வதாக உறவினர்கள் கண்ணீரோடு நெகிழ்ச்சி..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பழனிசாமி என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார், இவரது மகன் கிஷோர் 11 வயது கொண்டவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார், சில நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்து காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வந்தனர் இருந்தும் காய்ச்சல் குறையாமல் மிகவும் அவதிப்பட்ட கிஷோர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார், மேலும் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது, பெற்றோர் கண்ணீர் மல்க கதறியும் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர், கிஷோர் இருந்தும் உயிர் வாழ்கிறார் என்று உறவினர்கள் கண்ணீரோடு நெகிழ்ந்து போனார்கள்..!!