
உங்கள் குழந்தை என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லை என கவலைப்பட இனி தேவை இல்லை உணவில் சற்று கவனம் செலுத்தினாலே போதும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய உணவை தானாகவே விரும்பி சாப்பிடும்…
சில பெற்றோர்கள் பெரும் கவலையே தன் குழந்தை என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே இல்லை எப்போதுமே ஒல்லியாகவே இருக்கின்றனர் என்றுதான், அப்படி சரியாக சாப்பிடாத ஒல்லி ஆக இருக்கும் குழந்தைகள் சாப்பிட இது மாதிரியான உணவுகளை செய்து கொடுங்கள், குழந்தைக்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் தான் சிறந்த உணவு எனவே குழந்தைக்கு தாய்ப்பால் போதுமானது. ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு மெதுவாக சத்துமாவு கஞ்சியில் இருந்து உணவு பழக்கத்தை ஆரம்பிக்கலாம் குழந்தைக்கு முதலில் கேழ்வரகு நேந்திர பழம் ஆகியவற்றை கொண்டு கஞ்சி செய்து கொடுக்கலாம் கஞ்சியில் சுவைக்கு சிறிய பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம் தொடர்ந்து ஒரே மாதிரி கஞ்சி கொடுக்காமல் குழந்தைக்கு பார்த்ததும் கவரும் படி வண்ணம் சேர்த்து கொடுக்கலாம், உதாரணத்திற்கு பீட்ரூட் சாறு எடுத்து கஞ்சியில் சிறிது சேர்த்து பிங்க் நிறத்தில் கொடுக்கலாம் பொம்மை மாதிரி கலர் கலராக இருக்கலாம், மேலும் நார்ச்சத்து அதிகம் இல்லாத கஞ்சிகள் கொடுக்கலாம் பின்னர் சத்துமாவு கஞ்சிகள் கொடுக்கலாம் அதிலும் அதிக புரதம் நிறைந்த உணவுகள் சமைத்துக் கொடுக்கலாம் குழந்தைகளுக்கு பருப்பு சாதம் அடிக்கடி குலைய செய்து நெய் விட்டுக் கொடுக்கலாம், இரண்டு மூன்று வயதானதும் இதே சத்து மாவில் வித விதமான உணவு செய்து கொடுக்கலாம் உதாரணத்திற்கு சத்துமாவில் இட்லி, தோசை கொழுக்கட்டை மற்றும் இனிப்பு பலகாரம் செய்து கொடுக்கலாம், நிலக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவே நிலக்கடலையில் மிட்டாய் செய்து கொடுங்கள்..!!