மேகதாது பிரச்சனை குறித்து இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நீர்வளதுறை இணை அமைச்சர் சோமண்ணா..!! கடும் கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்..!!

பல ஆண்டுகளாகவே தமிழகத்திற்கும். கர்நாடகத்திற்கும் மேகதாது அணை தொடர்பாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது “மத்திய, மாநில அரசுகள் காவேரி மற்றும் மேகதாது அணை பிரச்சனையில் தொடர்ந்து கபட நாடகம்  ஆடி வருகின்றனர். இதனை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது தமிழகத்தில் ஆட்சி புரியும் திமுக அரசும் கர்நாடகத்தை ஆட்சி புரியும் கூட்டாளி கட்சியான காங்கிரஸ் அரசும் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்த வண்ணம் வருகின்றனர்.

அதற்கு ஏற்றாற் போல் பாஜக கூட்டணி அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு வருவது ஏற்றத்தக்கது அல்ல. தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்சனையை உடனடியாக தீர்க்க வைக்க வேண்டிய மத்திய அரசு கர்நாடக மாநிலத்தை சார்ந்த சோமண்ணா அவர்களை மத்திய ஜலசக்தி துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம்.

ஏற்கனவே காவேரி, மேகதாது பிரச்சனையில் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வழியே வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச மடந்தையாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது”, என கூறியுள்ளார்

https://x.com/EPSTamilNadu/status/1802684939449823436?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1802684939449823436%7Ctwgr%5E928933ace02f567c10e1d98b91cafafa9881a5ca%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.seithipunal.com%2Ftamilnadu%2Feps-condems-union-minister-somanna-speech-about-megathathu-issue

Read Previous

அண்ணன் தங்கை உறவு என்பது..!! கண்ணீர் வரவழைக்கும் பதிவு..!!

Read Next

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது வியப்பை தருகிறது..!! கார்த்திக் சிதம்பரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular