மேகியுடன் அரிசி சாதம் சாப்பிட்டதால் சோகம்..!! உணவு விஷமாக மாறி சிறுவன் பலி..!!

ஒருவேளைக்கு தானே மேகி கொடுக்கிறோம் என்று அலட்சியமாக செயல்பட்டு உங்களின் உயிருக்கு நீங்களே எமனாக மாறிவிடாதீர்கள்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் மாவட்டம் ராகுல் நகர் பகுதியில் சார்ந்த தம்பதி சீமா -சோனா. இந்த தம்பதிகளுக்கு ரோஹன், விவேக் என்கின்ற இரண்டு மகன்களும் சந்தியா என்ற ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட மேகி வாங்கி சமைத்துள்ளனர். மேகியுடன் அவர்கள் அரிசி சாதத்தையும் சேர்த்து மேகிரைசாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது, இதனால் இரவு உணவு சாப்பிட்ட குடும்பத்தினர் அடுத்தடுத்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளனர்.

உடனே அனைவரும் மருத்துவமனையில் சென்று சிகிச்சைக்காக அனுமதி ஆகியுள்ளனர், மருத்துவர்கள் உடனடியாக அனைவருக்கும் சிகிச்சை அளித்த நிலையில் அதில் 10 வயதுடைய சிறு ரோஹன் உயிர் இழந்துள்ளான்.பிற குடும்ப உறுப்பினர்கள் தீவிர சிகிச்சைகு பின்  உடல்நலம் தேறி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஹசாரா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக துரித உணவகத்தில் விற்பனை செய்யப்படும் மேகி போல பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் மேகி உணவு, பாக்கெட்டகளில் உள்ள மேகி ஆபத்தானது என மருத்துவர் வல்லுனர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் அதனை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அதனுடன் அரிசி சாதத்தையும் சேர்த்து சாப்பிட்டு அவர்கள் குடும்பத்துடன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதியான சம்பவத்தில் சிறுவன் உயர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

திருமண ஊர்வலத்தில் கரிக்கட்டையான மணமகன்..!! ஆவலுடன் காத்திருந்த மணப்பெண்ணுக்கு தீயாய் சென்ற துக்க செய்தி.!!

Read Next

நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்.! கடுப்பாகி மாப்பிள்ளை செய்த படுபயங்கர கொடூரம்.!! பேரதிர்ச்சி சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular