
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் விபத்து..!! 2 பேர் பலி..!! 3 பேர் படுகாயம்..!!
சேலம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்ததில் 5 பேர் சிக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாயமான 2 பேரை தேடும் பணியில், நிலக்கரி குவியலில் சிக்கி உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.