
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றசாட்டுகளை விசாரிக்க மல்யுத்த வீராங்கனை மேரிகோம் தலைமையிலான விசாரணை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது…!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, அதுகுறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் இந்த மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபல மல்யுத்த வீராங்கனை மேரிகோம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுவில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை திருப்தி முர்குண்டே, முன்னாள் டாப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜகோபாலன் மற்றும் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் இந்த மல்யுத்த சம்மேளத்தின் ஒருமாத கால நடவடிக்கையை கண்காணிப்பார்கள். அதே போல, தற்போது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றசாட்டுகள், மற்ற பிற குற்றசாட்டுகளையும் இந்த குழு விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.