
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் போல் மேற்கு வங்கத்தில் 2 பெண்கள் அரை நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து இன்று பேசிய, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷஷி பஞ்சா, “இச்சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்குகிறது. அந்த பெண்கள் கடையில் திருட முயன்றுள்ளனர். இதனால் அவர்களை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.