மேற்கு வங்கம் ரயில் விபத்துக்கு மோடியின் பத்தாண்டு கால தவறான ஆட்சியை காரணம்..!! மல்லிகார்ஜுன கார்கே..!!

மேற்கு வங்காளத்தில் நின்று கொண்டிருந்த பaணியர்  ரயிலின் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ஒன்பது பேர் பரிதாபாய் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த ரயில் விபத்துக்கு மோடியின் பத்தாண்டு கால தவறான ஆட்சியே காரணம் என்று காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலில் சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில்  ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பான வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்  “மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பலர் பரிதாபாய் உயிரிழந்துள்ளனர், படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்து செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து காட்சிகளை பார்க்கும்போது மனம் வேதனை அளிக்கின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயர நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். பத்து ஆண்டுகளில் இந்த மோடி அரசு ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வாகித்துள்ளது. சுய விளம்பரத்திற்காக மேடையாக கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக சட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றி உள்ளது. இந்த ரயில்வே துறையை கைவிட்ட மோடி அரசே இதற்கு முழு பொறுப்பேற்க செய்வோம்”, என்று கூறியுள்ளார்.

Read Previous

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பிளேடு..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Read Next

கள்ளக்காதலால் நடந்த விபரீதம்..!! உடலுறவு மறுப்பு தெரிவித்த பெண்..!! பேருந்து நிலையத்தில் படுகொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular