
கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக 12000 ஊழியர்களுக்கும் சுந்தர் பிச்சை சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த நடவடிக்கை கன்னத்தில் அறைந்து அனுப்பியதுபோல இருப்பதாக நீக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களும் தங்களுக்கு என்றைக்கு வேண்டுமானாலும் வேலை போகலாம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த மாதத்தில் மேலும் சிலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.