மைனர் சிறுமியுடன் 2 முறை ஓட்டம் பிடித்த இளைஞர்..!! 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பெங்களூர் நீதிமன்றம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியை சார்ந்த 22 வயதுடைய இளைஞர் வெங்கி. இவர் மைனர் சிறுமியை காதலித்து கரம் பிடிக்க துணிந்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் புகாரின் அடிப்படையில் முதல் முறை சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து இரண்டாவது முறையும் சிறுமி தனது காதலருடன் ஓட்டம் பிடித்தார். ஜாமினில் வெளியே வந்த காதலன் சிறுமையை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்து சிறுமியை திருமணம் செய்ய அழைத்து சென்றுள்ளார்.

இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமின் கூட கிடைக்காமல் தவித்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு பெற்று நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்துள்ளது. ரூ 41000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31, 2021 முதல் முறையாக சிறுமி தனது காதலருடன் ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து இரண்டாவது முறை 16 ஏப்ரல் 2022 அன்று சிறுமையின் பெற்றோரை கொலை செய்வேன் என்று மிரட்டி காதலன் காதலியை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

இருவருக்கும் சித்தூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்று உள்ளது. இரண்டாவது முறையும் மீட்கப்பட்ட சிறுமியிடம் நடந்த விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது ,தற்பொழுது இந்த  வழக்கில் நீதிபதிகள் அதிரடியாக தங்களின் தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

Read Previous

பணம் கேட்ட நபருக்கு, ஒரே போட்டோவில் கலாய் பதிலடி..!! வைரலாகும் வாட்சப் பேச்சு.!!

Read Next

மின் கசிவால் சோகம்; பெண், 7 குழந்தைகள் உடல் கருகி பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular