மொச்சை கொட்டையில் கொட்டி கிடக்கும் நன்மைகள்..!! அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!
பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய மொச்சை கொட்டை ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. பார்க்க வழுவழுப்பாக இந்த கொட்டை இருப்பதால் இது பட்டர் பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த சர்க்கரை பிரச்சனை இருப்பவர்களுக்கு மொச்சை நல்ல தேர்வாக இருக்கும். இன்டர்னல் மெடிசின் வெளியிட்ட ஆய்வின் முடிவில், மொச்சை போன்ற அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இதய நோய்களை தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




