
பாரம்பரிய உணவு முறைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக மொச்சை பயறு காணப்படுகின்றது.
உணவே மருந்து என வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள், இதனால் தான் அவர்களால் நோய் இன்றி நீண்ட நாட்கள் வாழக் கூடியதாக இருந்தது.
அந்த வகையில் பல நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் மொச்சை பயறு சாப்பிடுவதன் அவசியம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல்வேறு ஊட்டச் சத்துக்களை கொண்ட மொச்சை பயறை குறிப்பாக பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டியது அவசியம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளுக்கு மொச்சை பயறில் காணப்படும் போலேட் எனும் வேதிப்பொருள் தீர்வு கொடுக்கின்றது.
மொச்சை பயறில் அதிகளவவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் கர்ப்ப காலத்திலும் மாதவிடாயின் போதும் குழந்தை பிரசவித்த முதல் 3 மாதங்களிலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கலுக்கு இது மிக சிறந்த தீர்வாக இருக்கும்.
மேலும் மொச்சை பயற்றில் உள்ள போலேட் பிறந்த குழந்தைகளின் பிறப்புக்குறைப்பாட்டை போக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
பொதுவாக பெண்களுக்கு நாளொன்றுக்கு 400எம்.சி.ஜி போலேட் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதுவே கர்ப்ப காலமாக இருந்தால் 600 எம்.சி.ஜி தேவைப்ப்படுகின்றது.
இதை மொச்சை பயறு விரைவாக பூர்த்தி செய்கின்றது. மொச்சை பயிறில் மக்னீசியம் அதிகளவு உள்ளது. இந்த மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.
இரத்த சோகை போன்ற இரும்புச் சத்து குறைப்பாட்டை போக்குகிறது. எனவே உடல் எப்பொழுதும் சோர்வாக இருப்பவர்கள் மொச்சை பயிறை தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம்.
இந்த மொச்சை பயிறில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
பெண்களின் கரு உற்பத்திக்கும் கருச்சிதைவை தடுகக்கவும் மொச்சை பயறு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. அதை அனைவரும் வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.