மோகனூர் அருகே வடமாநில சிறுமி ஒருவர் இறந்துள்ளதை அடுத்து மோகனூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது..
மோகனூர் அருகே உள்ள மட்டப்பாறை உள்ள தனியார் கோழி பண்ணையில் வேலை செய்து வந்துள்ள சட்டீஸ்கரை சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த நான்கு நாட்களாக கோழி பண்ணைக்கு வேலைக்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள வேறு ஒரு கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்றுள்ளார், அச்சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடன் வேலை செய்யும் தொழிலாளிகள் அனுப்பி வைத்தனர் அங்கு அந்த சிறுமையை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இறந்துள்ளதாக தகவல் தந்தனர் இதனால் சந்தேகம் அடைந்த மோகனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!