செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக பக்தர்கள் கொண்டாடி இருந்தனர், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் பெரும் பக்தியுடன் வழிபட்டு வந்த நிலையில்…
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 763 விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பகுதியிலும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை கரைப்பதற்காக நாமக்கல் காவல்துறை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது, நேற்று செப்டம்பர் 8 முதல் விநாயகர் சிலை கரைப்பதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது, நேற்று காலை முதல் இரவு வரை ராசிபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், நாமக்கல், மல்லூர், சீவல நாயக்கன்பட்டி, ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 64 விநாயகர் சிலையை மோகனூர் காவிரி ஆற்றில் கரைப்பதற்கு நாமக்கல் காவல்துறை அறிவித்துள்ளது, இதனை தொடர்ந்து பக்தர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக விநாயகர் சிலையை கிடைப்பதற்கு உற்சாகத்துடன் மோளம் அடித்துக்கொண்டு ஆடிக்கொண்டு நடனத்தோடு வருகின்றனர் மேலும் நாமக்கல் மாவட்டத்தில் பலத்த காவல்துறையின் பாதுகாப்பு பணியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது…!!




