கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் மணமங்கலம் தாலுகாவை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலைய மற்றும் எஸ்பி அலுவலகத்தில் பிரகாஷ் புகார் அளித்தார்.
இந்த புகாரியின் அடிப்படையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட நில மோசடி வழக்கு சிபிசிஐடி மாற்றம் செய்யப்பட்டது. இதனால் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தா.ர் அந்த மனுவை விசாரணை செய்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமின் மனுவினை தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து எம்,ஆர்.விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் எம்,ஆர். விஜயபாஸ்கர் வட மாநிலத்திற்கு தப்பி சென்றதாக தகவல் பரவியது. மேலும் அவரை பிடிக்க 5 படை போலீசார் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் மீது ஆறு பிரிவுகளின் கீழ் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரூ100 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் எம் ஆர் விஜயபாஸ்கரின் பெயர் சேர்க்கப்பட்டு கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.