
இன்றைய காலகட்டத்தில் பலரும் இதய ஆரோக்கியமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதய நோயினால் பாதிக்கப்பட்டவர் மேலும் பலருக்கும் இதய ஆரோக்கியத்திற்கான அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள்…
படபடப்பு மன அழுத்தம் காபின் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உங்கள் இதயம் மிக வேகமாக சென்று ஒழுங்கற்ற முறையில் துடித்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும் இதன் மூலம் மருத்துவர் உங்களது உடலை பரிசோதனை செய்து உடலுக்கு தேவையான மருந்துகளை தருவார். ஏதாவது வேலை செய்யும்போது அல்லது ஓய்வெடுக்கும் போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டால் கவனம் தேவை மூச்சு திணறல் ஏற்படும்பொழுது அதனை சாதாரணமாக எண்ணாமல் உடனே மருத்துவரை அணுகி அதற்கான பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். இடிமா எனப்படும் இந்த நிலை உடலில் திசுக்களில் அதிகப்படியான திரவம் சேரும்போது ஏற்படுகிறது இவை கால்கள் கணுக்கால் பாதங்களில் வீக்கம் ஏற்படும். மார்பு வலி அல்லது மார்பில் ஏதோ ஒரு விதமான உணர்வு இது கரோனரி தமனி நோயின் அறிகுறியாக இருக்கலாம் இது பெரும்பாலும் இதயத்திற்கு ரத்த ஓட்டம் இல்லாததால் ஏற்படுகிறது. குமட்டல் அல்லது வாந்தி சிலர் மாரடைப்பின் போது இந்த அறிகுறிகளை அனுபவிக்கின்றனர் குறிப்பாக வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு ரத்தம் கலந்த சளி வெளியானால் அது இதய செயலிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவரிடம் தகுந்த பரிசோதனை மேற்கொண்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும்…!!