யானை வழித்தட திட்ட வரவு அறிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்..!! டிடிவி தினகரன்..!!

தமிழக அரசின் யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் பாதிப்புக்கு உள்ளாகும் மலைவாழ் மக்கள் வனத்துறையால் அவசரகதியில் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கையை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பது “தமிழக அரசின் வனத்துறையின் சிறப்பு குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், ஓவேலி, முதுமலை ஆகிய வனச்சரங்களை ஒட்டிய சுமார் 30,000 வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், நெருக்கடியான யானை வழித்தடங்களை அடையாளம் காணுதல், யானைகளுக்கான நீர் ஆதாரம் உள்ளிட்டவைகளை அத்தியாவசியமானது என்றாலும் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் மலை வாழ் பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இவ்வரிக்கையை  கடும் கண்டனத்திற்குரியது.

வனத்துறை மூலமாக தயாரிக்கப்பட்ட யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருப்பதோடு அதற்கான கருத்துக்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு குறுகிய அளவு மட்டுமே வழங்கியிருப்பது பன்னெடுங்காலமாக மலைப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் செயலாகும். எனவே தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட அறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கையினை தயாரித்து, உரிய கால அவகாசம் கொடுத்து. பொதுமக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னே இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”,  என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் தாக்குதல்..!! நீதிபதி அதிரடி உத்தரவு..!!

Read Next

சேலம் விரையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular