நடிகர் சங்கம் ஆண் கலைஞர்களுக்கு மட்டுமல்ல, பெண் கலைஞர்களுக்கானதும் தான். நாங்கள் விசாகா கமிட்டியை உருவாக்கியதற்கான முக்கிய காரணமே பெண்கள் பயமில்லாமல் வந்து புகார் அளிக்க வேண்டும் என்பதற்காக தான். புகாரின் அடிப்படையில் அந்த நபர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களது கோரிக்கை என்னவென்றால் பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருந்தால் தயவு செய்து தைரியமாக வந்து புகார் கொடுங்கள் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார்.




