
யாருக்காவது பூரான் கடித்தால் உடனே இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!
பூரான் என்றாலே ஒரு அச்சுறுத்தும் வகையில் அனைவரும் பயப்படக்கூடிய ஒன்று ஆகும். இல்லையில் பூரான் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பூரான் கடித்தால் மருத்துவரை பார்ப்பது அவசியமான ஒன்றுதான். ஆனால் கடித்த உடனே மருத்துவர் பார்க்க முடியாது. இடைப்பட்ட நேரத்தில் பூரான் கடித்த உடனே இதை செய்ய வேண்டும். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
யாருக்காவது பூரான் கடித்தால் உடனே கல்லுப்பை தண்ணீரில் கரைத்து கடிபட்ட இடத்தில் கழுவும். உப்பு ஆன்ட்டி செப்டிக்காக பயன்படுகிறது. மற்றும் பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டவும். அதை வைப்பதால் அதன் விஷம் உடனடியாக குறைந்துவிடும். இன்னொரு முறையும் உண்டு பூரான் கடித்தால் வெத்தலையுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் அதன் விசம் குறைந்து விடும். இதையெல்லாம் கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பூரான் கடித்த உடனே இதையெல்லாம் நாம் பண்ண வேண்டும். பின்பு மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.