
வெள்ளைப்பூண்டு வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்துவிடும். பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கி போட்டு கசாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் வாந்தி கொட்டாவி குறையும். பூண்டு சாற்றில் சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் சுழுக்கு மறையும். குப்பைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியே வந்துடும். பச்சை பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும் உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும். புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும் இரத்த அழுத்தம் குறையும். பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இருவேளை சாப்பிட கீழ்வாதம் குணமாகும் .பூண்டையும் சிறிது உப்பையும் சேர்த்து தின்றால் திடீரென ஏற்படும் வயிற்று வலி நெஞ்சு எரிச்சல் நெஞ்சு கரிப்பு குறையும். ஒரு வெள்ளைப் பூண்டு ஏழு மிளகு இவைகளை சேர்த்து அரைத்துக் காலை மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும் பூண்டை பாலில் போட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் மாரடைப்பு வராது. இரத்த குழாயில் கொழுப்பு படியாது பூண்டை பொன்னாங்கண்ணி கீரைடன் சேர்த்து சாப்பிட மூலநோய் நீங்கும்.