Oplus_16908288
நிறைய பெண்கள் உண்டு உலகத்துல..
அதுல ஒருத்தி மட்டும் உங்கள்
கண்ணுக்கு தனிச்சு தெரிவா..
அவ என்னா சொன்னாலும் பிடிக்கும்..எது பேசினாலும் பிடிக்கும்!
பார்த்துட்டே இருக்கலாம்னு தோனும்
கருவறையில் மட்டும் அவ உங்களை
சுமக்க மாட்டா அவ்வளவுதான்..
ஆனா,மத்தபடி எல்லாத்தையும்
உங்களுக்கா பொறுத்து,
அத்தனையும் சகிச்சிகிட்டு,உங்களை தூக்கி
திரிந்திகிட்டு இருப்பாள்.
சாப்பிட்டியா?என்ன பண்றே?
பைக் பார்த்து கவனமா ஓட்டு
உடம்பை கவனிச்சக்கனு அன்பினாலேயே அதட்டி எடுப்பா..
கோவமெல்லாம் அக்கறைனு புரிய
வைப்பா..
கத்தறதெல்லாம் பாசம் னு
தெரிய வைப்பா..
சண்டையெல்லாம் எதிர்காலம் னு
அறிய வைப்பா..
பல காயங்களுக்கு மருந்து போடுவா..சில காயங்களுக்கு
அவளே காரணமாவா..
இந்த நிமிசம் உன்னை அவ்வளவு
பிடிக்குது னு சொல்வா..
அடுத்த நிமிசமே உன்னைப்போல
யாரும் என்னை இந்த அளவு
அழவச்சது இல்லை னு புலம்புவா..
ஒரு பெரிய மனக் கஷ்டத்தை தூக்கிட்டு திரியும்போது
இதெல்லாம் பிரச்னையானு
அதை தன்னுடைய தலையில
தூக்கி வெச்சிப்பா..
தாயா இருப்பா..
பிள்ளையா இருப்பா..
டீச்சரா இருப்பா..
வழிகாட்டியா இருப்பா..
எல்லாமுமா இருப்பா..
எதிலேயும் தராத மகிழ்வு ஒன்னு
இந்த உலகத்தில இருக்குதுனா
அது அவ தான்..
யார் அவள்?..




