யாஷின் ‘கேஜிஎப்’ படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவரது புதிய படமான ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், கன்னட திரைப்பட வரலாற்றில் தமிழக சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாக புதிய சாதனை படைத்துள்ளது. சுமார் ரூ.63 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.




