யுபிஐ மூலம் கடந்த மாதம் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை..!!
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த மாதம் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்பிலான 1,658 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். பரிவர்த்தனை எண்ணிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தைவிட இது 10 சதவீதமும், பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 14 சதவீதமும் அதிகம் என தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலும் யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்க, மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.




