யூடியூபரின் நிர்வாண விடியோவை லீக் செய்த ஹேக்கர்கள்..!! ஹோம் டூர் வீடியோ பதிவிட்டவர்களே உஷார்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பந்த்ரா பகுதியை சார்ந்த 21 வயதுடைய நபர்யூடியூபராக இருந்து வருகிறார். இவர் தனது யூடியூப் பக்கத்தில் தினமும் வீடியோக்களை பதிவிடுவது இயல்பு என கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி யூடியூப்-இன் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஹேக் செய்த நபர் ஒருவர் யூடியூபர் குளித்துவிட்டு உடலில் ஒட்டு துணி இன்றி நிர்வாணமாக தனது அறைக்குள் வந்து உடைமாற்றும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகளை ஹேக்கர் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர், வீடியோவை  யூடியூபரின் நண்பரின் கவனத்திற்கு வந்தது.

அவர் யூடியூபரை தொடர்பு கொண்டு தெரிவித்த போது தான் சிசிடிவி கேமரா ஹேக் செய்யப்பட்டு வீடியோ பதிவிடப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ந்து போன யூடியூபர் மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரனை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகையில் “இன்றளவில் யூடியூப் பக்கங்களில் பலரும் தங்களின் ஹோம் டூர் என்ற பெயரில் தங்களின் வீட்டில் உள்ள அறைகள், பீரோவில் இருக்கும் பொருட்கள், முக்கிய லாக்கர் சாவி வைக்கும் இடம் என்று அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர். இவை சாமானியர்கள் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் விஷம எண்ணம் கொண்டவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.

வீட்டில் கேமரா பதிவு செய்யப்படும்போது பதிவாகும் காட்சிகளை வைத்து வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை உட்பட பிற விவரங்களை தெரிந்து கொண்டு பின் கை வரிசையை காண்பிப்பார்கள். மேற்கூறிய விஷயத்திலும் அவ்வாறே நடந்திருக்க வேண்டும். இது குறித்து விசாரணைக்கு பின்னரே வெளி நபர் செய்த செயலா..? அல்லது நன்கு பழகியவர் மேற்கொண்ட விவகார செயலா..? என்பதே தெரியவரும் யூடியூப் பக்கத்தில் நமது தனிப்பட்ட விவரங்களை பதிவிடும் போது கவனமாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்கிறோம் என்ற பெயரில் அது இது அலட்சியத்துடன் செயல்பட்டால் திருட நினைப்பவர்கள் அதனை தனக்கென வாய்ப்பாக பார்ப்பார்கள்”, என்று கூறியுள்ளனர்.

Read Previous

உல்லாசத்திற்கு மறுத்த லிவிங் டுகெதர் காதலி..!! கத்தரிக்கோலால் கழுத்திலேயே குத்தி கொடூர கொலை.!!

Read Next

வெறும் 50 நாளில் 16 கிலோ எடை குறைத்த நடிகை ஆல்யா மானசா… ரகசியம் என்ன.? வைரலாகும் பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular