யோசிக்கும் திறன் அதிகரிக்க வேண்டுமா.? இந்த யோகா செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்.!!

யோகா என்பது நம் நாட்டின் பாரம்பரியமாக ஒன்றாகும். இந்த யோகா நம்முடைய உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும்  சிறந்த பயிற்சியாக உள்ளது. நம்முடைய உடலை வலுவாக வைப்பதற்கு யோகா பயிற்சிகள் உள்ளது. அதேபோல் மூளையின் திறனை அதிகரிப்பதற்கான யோகா முறைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹாலாசனா என்ற  ஆசனத்தை  செய்வதன் மூலம் மனதின் சக்தி அதிகரிக்கும். சிந்தனை திறன் கூடும். இந்த ஆசனத்தை செய்வதால் தலைகீழாக கலப்பை  போல் நம்முடைய உடலை நீட்ட முடியும்.

பஸ்சிமோத்தனாசனம் என்ற  ஆசனத்தை செய்வதன் மூலம் மூளைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்பக்கமாக நகர்ந்து கால்களை தொட வேண்டும்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம் என்ற ஆசனத்தை செய்வதன் மூலமாக, மூளையின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பிராணயாம யோகா பயிற்சி செய்வதன் மூலமாக, மன அமைதி ஏற்படும். இந்த பயிற்சியை செய்வதற்கு மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.

வஜ்ராசனம் என்ற யோகாவை செய்வதால், நம்முடைய உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லலாம். அத்தோடு, இந்த யோகா தசைகளை இலகுவாக்க உதவுகிறது.

பத்மாசனம் என்ற யோகாவை செய்வதன் மூலம் உடலில் இருக்கின்ற சக்கரங்கள் தூண்டப்படுவதோடு, மூளைக்கு அமைதியான சூழ்நிலையை உண்டாக்கும்.

Read Previous

மார்கழி மாதமும், நடக்காத திருமணமும்..!! காரணம் என்ன..?

Read Next

அச்சச்சோ.. குழந்தைகள் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றங்களா..?மாரடைப்பு, பக்கவாத அபாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular