
ரக்ஷா பந்தன் நாளில் முரண்பாடான வழக்கு. வருத்தம் அடைந்த நீதிபதி.
இந்தியாவில் நேற்று ரக்ஷா பந்தன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சகோதரர் மற்றும் சகோதரராக நினைக்கும் ஆண்களின் கையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ராக்கி கயிறு கட்டுவது இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.
இவ்வாறு கட்டப்படும் கயிறு, கயிறு மட்டும் அல்ல சகோதரர் தனது வாழ்க்கைக்கு துணையாகவும் கடைசி மூச்சு வரை வளர்ப்பதாகவும் அந்த பெண் நினைத்துக் கொள்வார். இதே போல் ஆண்களும் கருத வேண்டும் என்பதுதான். ஆனால் ரக்ஷா பந்தன் தினத்தன்று ஒடிசா உயர் நீதிமன்றத்தில் சகோதரரால் சகோதரி கர்ப்பம் அடைந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி மேல்முறையீடான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இது தொடர்பாக நீதிபதி கூறியதாவது, “வாழ்நாள் முழுவதும் சகோதரிக்கு சகோதரன் பாதுகாப்பாகவும் கடைசி மூச்சு வரை நன்றாக வளர்ப்பேன் என்று உறுதி கொள்ளும் ஒரு புனிதமான நாளில் இது போன்ற முரண்பாடான வழக்கைக் கேட்டு அதற்கு தீர்ப்பு வழங்குவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
கடந்த 2018 முதல் 19 வரை தங்கையை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான். அதன் விளைவாக அந்த சிறுமி 14 வயதிலேயே கர்ப்பமானதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.