• September 24, 2023

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் மாமன்னன் படம்.. படக்குழுவினர் கொண்டாட்டம்..!!

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் மாமன்னன் படத்தால் படக்குழுவினர் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் படிக்க உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Previous

பல தாது சத்துக்கள் நிறைந்த சிறுகீரை அளிக்கும் பெரும் பலன்கள்..!!

Read Next

720 ட்ரிக் மூலம் ஸ்கேட்டிங் செய்து அசத்தி உலக சாதனை செய்த 17 வயது சிறுமி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular