மாடல் அழகியாக இருந்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து வளர்ந்து துபாயில் சென்று செட்டில் ஆனார். அதன் பிறகு இவர் மாடலிங் மற்றும் கார் ரேசிங் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்து வந்தார்.
இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அந்த திரைப்படத்தில் அவரின் மிகச் சிறந்த நடிப்பு ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து
தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், டிக் டிக் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இவர் நடித்து புகழ்பெற்றார் . இந்நிலையில் தற்போது ஹோம்லி லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ” டோலி ” படத்திற்கான லுக் டெஸ்ட் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
View this post on Instagram