ரஜினியின் அடுத்த திரைப்படத்தைப் பற்றி புதிய அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.!!

தமிழ் திரை உலகிற்கு “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பின் நடிகர் கார்த்தியை வைத்து “கைதி” என்கின்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.

அதன் பிறகு உலகநாயகன் கமலஹாசனை வைத்து “ விக்ரம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் சமீபத்தில் தளபதி விஜயை வைத்து “லியோ” என்கிற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படி அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வந்தது.

இந்த நிலையில் தான் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்தின் கதை “லியோ” திரைப்படம் நடந்து கொண்டிருந்தபோது ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம் இயக்குனர் லோகேஷ் கடகராஜ். தற்போது ரஜினிகாந்த் டி.ஜே .ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக முழுவடைய உள்ளது என கூறப்படுகிறது.

எனவே அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றி பேசிய லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படம் அதிரடி, ஆக்சன், திரில்லராக உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்தில் ஸ்கிரிப்ட் தொடர்பான பணிகள் இன்னும் இரண்டாவது மூன்று மாதத்தில் முடித்து விடுவேன் என்றும் எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறியுள்ளார்.

அதோடு திரைப்படத்தின் பணிகள் தொடர்பாக ரஜினிகாந்த் தனக்கு கால் செய்து கேட்டறிவார் என்றும் தான் ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்தாலும் அது அவருக்கு தெரிந்து விடும் என்றும் கூறியுள்ளார். அதோடு இந்த திரைப்படத்தில் அதிக அளவிலான ஆக்ஷன் காட்சிகளை பயன்படுத்த இருப்பதாகவும் வெகு நாட்களுக்குப் பின் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஆக்சன் காட்சிகளில் பார்க்கலாம் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டார்.

இதுவரை முயற்சி செய்யாத வித்தியாசமான முறையில் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்டுவிட்டு ரஜினிகாந்த் மிகவும் சந்தோஷப்பட்டார் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Read Previous

“ஷ்ரேயா கோஷலையே மயக்கிய பெண்ணின் குரல்..!!” பியூர் ப்ளிஸ் என்று பதிவிட்ட ஸ்ரேயா கோஷல்..!!

Read Next

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular